திறந்தவெளிச் சிறைச்சாலையில் இருந்து தப்பியோடிய கொலைக்குற்றவாளி
போகம்பர பல்லேகல திறந்தவெளிச் சிறைச்சாலை முகாமில் இருந்து கொலைக் குற்றவாளியொருவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொலைக்குற்றச்சாட்டு நீதிமன்றத்தினால் நிரூபிக்கப்பட்ட நிலையில் 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவரே தப்பிச் சென்றுள்ளதாக பல்லேகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிகவெரட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த திலக் குமார அல்லது லபய (வயது 47) என்பவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
சூட்சுமமான முறையில் தப்பியோட்டம்
திறந்தவெளிச் சிறைச்சாலையில் கைதிகள் வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போது கடந்த வியாழக்கிழமை குறித்த கைதி சூட்சுமமான முறையில் அவர்களுக்கு காவலாக இருந்த சிறைச்சாலை அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் பல்லேகல பொலிஸில் முறைப்பாடும் செய்துள்ளனர். பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |