கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் படுகொலை! பின்னணியில் வெளியான காரணம்
தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலி ஆர நெடோல்பிட்டிய பகுதியில் பெண் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று (27.3.23) இடம்பெற்றுள்ளது.
இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு
சம்பவத்தில் 30 வயதான ஆர்.எம். தீபஷிகா என்பவே உயிரிழந்துள்ளார். அதே பகுதியில் விவசாய அபிவிருத்தி உதவியாளராக கடமையாற்றியவர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்த பெண், இன்று காலை களப்பணிக்கு சென்று கொண்டிருந்த போது, அந்த பகுதியை சேர்ந்த ஒருவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் விவசாய அபிவிருத்தி உதவியாளரிடம் உரம் கோரியமை தொடர்பில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பொலிஸார் தீவிர விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் தங்காலை பிரதேச சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தில் போட்டியிடும் வேட்பாளர் என தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் தங்காலை நீதவான் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தங்காலை நீதவான் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.


இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
