வத்தளையில் இடம்பெற்ற கொடூர கொலை! பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சியளிக்கும் பின்னணி
வத்தளை, ஹேகித்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
பொலிஸாரின் கூற்றுப்படி, முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத நான்கு நபர்களால் உயிரிழந்தவர் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ பின்னணி
பலியானவர் சம்பவம் இடம்பெற்ற வீட்டின் மேல் மாடியில் வாடகைக்கு வசித்து வந்தவர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டு மஹாபாகேயில் நடந்த ஒரு கொலை சம்பவத்தில், தற்போது உயிரிழந்த நபர் உதவி செய்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதன்படி சந்தேக நபர்களைக் கைது செய்ய வத்தளை பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




