மன்னாரில் சகோதரர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம்! சந்தேகநபர்கள் தலைமறைவு
மன்னார் – நொச்சிக்குளம் பகுதியில் சகோதரர்கள் இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 16 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் தலைமறைவு
எனினும், சந்தேக நபர்கள் அனைவரும் தலை மறைவாகியுள்ளதாகபொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது கொலை செய்யப்பட்ட இருவரின் சடலங்கள் இன்று (11) காலை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைக்கான காரணம்
யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு வலு பெற்றதையடுத்து, நேற்று சனிக்கிழமை (10) காலை கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் 33 மற்றும் 42 வயதான சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
உயிலங்குளம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
