சகோதரர்கள் வெட்டிக்கொலை! வெளியானது முழு விபரம் - செய்திகளின் தொகுப்பு
மன்னார் - நொச்சிக்குளம் பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் மன்னார் - உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் என தெரியவந்துள்ளது.
கடந்த வாரம் மன்னார் உயிலங்குளம் பகுதியில் மாட்டுவண்டிச் சவாரி இடம்பெற்றுள்ளது. இதன்போது தர்க்க நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர் ஒருவர் நொச்சிக்குளத்தில் வசித்து வருகிறார்.
அவருடனும் மாட்டு வண்டி சவாரியின் போது நொச்சிக்குளத்தைச் சேர்ந்த சிலர் தர்க்கத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று காலை குறித்த நபர் நொச்சிக்குளத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து மாடு கட்டச் சென்றுள்ளார்.
இதன்போது மாட்டு வண்டி சவாரியின் போது தர்க்கத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த நபர் மீது வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,