முன்னாள் இராணுவ உத்தியோகத்தர் கடத்தி கொலை
களுத்துறையில்(Kalutara) முன்னாள் இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெபுவன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெபுவன பேகமுவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
51 வயதான முன்னாள் இராணுவ சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
8 இலட்சம் மோசடி
இரண்டு பேரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 8 இலட்சம் ரூபா பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக உயிரிழந்த இராணுவ உத்தியோகத்தர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் அடிப்படையில் குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கொலையுடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், மோசடியில் சிக்கியதாக கூறப்படும் இரண்டு பேரும் மற்றுமொருவரும் இணைந்து இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
you may like this
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri