சட்டத்திற்கு புறம்பாக செயற்படும் மட்டக்களப்பு மாநகரசபை : தி.சரவணபவன் குற்றச்சாட்டு (Photos)

Srilanka Batticaloa MunicipalCouncil
By Kumar Feb 09, 2022 08:26 AM GMT
Report

மட்டக்களப்பு மாநகரசபையில் மாநகரசபையின் கட்டளை சட்டம் இலங்கை சோசலிச குடியரசின் சட்டம் மீறப்படுவது வெளிப்படையாகயிருந்தும் மாகாணசபை நிர்வாகம் இதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளின் அபிவிருத்திக்காக 2020ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி மூலமான வேலைத்திட்டங்கள் ஆரம்பித்துவைக்கப்பட்டு வருகின்றன. இதன்கீழ் மட்டக்களப்பு விமான நிலைய பிரதான வீதியின் 01ஆம் மற்றும் 02ஆம் குறுக்கு வீதிகளின் புனரமைப்பு பணிகள் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டன.

வட்டார உறுப்பினர் அ.கிருரஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் கலந்துகொண்டு வீதி அபிவிருத்தி பணியை ஆரம்பித்து வைத்தார். இதன்போது உரையாற்றிய போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இந்த வேலைத்திட்டங்கள் 2020ஆம் ஆண்டு பாதீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

2020ஆம் ஆண்டு மத்திய அரசு மற்றும் வேறு நிறுவனங்கள் ஊடாக வழங்கப்பட்ட பாரிய வேலைத்திட்டங்கள் இருந்த காரணத்தினால் டிசம்பர் மாதத்தில் செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் 2020 டிசம்பரில் நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இந்த வேலைகளை அமுல்படுத்துவதில் பாரிய தாமதங்கள் ஏற்பட்டது.

இதேபோன்று 2021ஆம்ஆண்டு வேலைத்திட்டங்களும் தாமதப்படுத்தப்பட்டிருந்த காரணத்தினால் மாற்று திட்டமாக மாநகரசபை நேரடியாக வேலைத்திட்டங்களை செய்யாது வெளியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் இதனை வழங்கி பூர்த்தி செய்வது என்று மாநகரசபையின் தீர்மானத்தின் அடிப்படையில் வெளியாருக்கு வழங்கப்பட்டு திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றது.

அந்த அடிப்படையில் 2020,2021ஆம் ஆண்டுகளில் பூர்த்தி செய்யப்படாத வேலைகளை வெளியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கி முடிக்கப்பட்டு வருகின்றது.

மாநகரசபையின் செயற்பாடுகளுக்கு தடையாகயிருக்கும் அதிகாரி மாற்றப்படும் பட்சத்தில் மாநகரசபை நேரடியாக களத்தி இறங்கி பொதுமக்களுக்கு அதியுட்ச நன்மைகளை வழங்ககூடிய வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். வெளியாருக்கு ஒப்பந்தம் வழங்கும்போது சுமார் 40வீதமான வேலைகள் குறைவாக செய்யக்கூடிய நிர்ப்பந்தம் உள்ளது.

மாநகரசபை வளங்களை பயன்படுத்தி நாங்கள் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்போது ஒதுக்கப்பட்ட நிதியானது பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மட்டும் பயன்படுத்தப்படுவதனால் மதிப்பீட்டுக்கு அதிகமான வேலைகளை செய்யகூடியதாகயிருந்தது.

மட்டக்களப்பு மாநகரசபையில் மாநகரசபையின் கட்டளை சட்டம் இலங்கை சோசலிச குடியரசின் சட்டம் மீறப்படுவது வெளிப்படையாகயிருந்தும் மாகாணசபை நிர்வாகம் இதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இது தொடர்பாக ஆணைக்குழுக்களை நிறுவியிருந்துடன் அதன் ஊடாக மாநகரசபையின் கட்டளை சட்டம் மீறப்பட்டுள்ளமை தெளிவாகியிருந்தது.

மாநகரசபையின் கட்டளை சட்டம் மீறப்பட்டுள்ள நிலையில் அதனை மீறிய அதிகாரிக்கு எதிராக எந்தவிதமான ஒழுக்காற்று நடவடிக்கைகளும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. அவ்வாறு ஓழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்பட்டிருந்தால் மாநகரசபையின் செயற்பாடுகளில் எந்தவித தடங்கல்களும் ஏற்பட்டிருக்காது எனவும் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.

மாநகரசபையின் 20இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் இந்த வீதிகள் புனரமைப்பு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் மாநகரசபை உறுப்பினர் துரைசிங்கம் மதன் உட்பட பிரதேச கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, காங்கேசன்துறை, கொழும்பு சொய்சாபுரம்

26 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Ontario, Canada

29 Nov, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

27 Nov, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
41ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

28 Nov, 1985
51ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

28 Nov, 1975
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

28 Nov, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கொக்குவில்

28 Nov, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Landau, Germany

27 Nov, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சங்குவேலி, தாவடி

19 Nov, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, ப்ரூகன், Germany

24 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, வவுனியா

27 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US