பொருளாதார நெருக்கடியால் திணறும் ஏறாவூர் நகரசபை : கவலை தெரிவிக்கும் தலைவர்(Photos)
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக ஏறாவூர் நகரசபையின் வருமானம் மற்றும் அறவீடுகள் பாதியாக குறைந்துள்ளதாக ஏறாவூர் நகர சபையின் தலைவர் எம்.எஸ். நழிம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - ஏறாவூர் நகர சபை அலுவலக மண்டபத்தில் இன்று(28) நகரசபையின் 52வது மாதாந்த அமர்வு இடம்பெற்றுள்ளது. இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நகர சபையின் வருமானத்திலும் வீழ்ச்சி
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் “நகரசபை தலைவர் நழிம், தற்போதைய நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலை ஏறாவூர் நகரசபையின் வருமானத்திலும் கணிசமான வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களின் வாழ்க்கை தொழிலை இழந்து, வருமானத்தை இழந்து, நிம்மதியை இழந்து விரக்தியுற்ற நிலையில் உள்ளது.
அதனால் மக்களிடம் அறவீடுகளை மேற்கொள்ள முடியாத நிலையில் நகரசபை வருமானமின்றி சிரமத்தை எதிர்நோக்கியுள்ளது.
அனைத்து தொழில் துறைகளுமே கேள்விக்குறியாகியுள்ளது. அன்றாட தொழிலாளர்கள் மட்டுமல்ல அரச உத்தியோகத்தர்களும் கூட பொருட்களின் அசுர விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
நகரசபை திணறல்
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தினால் நகரசபை அதன் சேவை வழங்கல் பாவனைக்கான எரிபொருள், மின் உபகரணங்கள், காகிதாதிகள் உட்பட பல சேவை வழங்கும் பொருட்களை கூட கொள்வனவு செய்ய முடியாமல் திணறி வருகின்றது ” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் அனைத்து தரப்புக்கும் வழங்கப்பட வேண்டும்: செ.மயூரன் |