மட்டக்களப்பில் என்ற போர்வையில் மக்களை அடக்கும் நடவடிக்கை.. முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
மட்டக்களப்பு மத்தியஸ்தர் வீதியில் வாகன தரிப்பிடத்தை மாநகரசபை மேலும் விஸ்தரிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்பில் சமூக செயற்பாட்டாளர் நாகையா ரதி குற்றம் சாட்டியுள்ளார்.
மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியா கற்கை நிலையத்தில் இன்று (05.02.2026) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் தெரிவிக்கையில், "மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வாகனங்களில் வருபவர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்காக நீண்ட காலமாக மத்தியஸ்தர் வீதியில் வைத்தியசாலை மதில் ஓரமாக மாநகர சபை தற்காலிக கொட்டகை அமைத்து வாகன தரிப்பிடமாக்கி அதனை குத்தகைக்கு வழங்கி வந்தனர். இந்த நிலையில் குறித்த வாகன தரிப்பிடம் இந்த வருடம் 75 இலட்சத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது.
பல்வேறு அசௌகரியங்கள்
இந்நிலையில் அந்த வாகன தரிப்பிடத்தை மேலும் விஸ்தரிப்பு நடவடிக்கையினை மாநகரசபை மேற்கொண்டு வருகிறது.

இந்த விஸ்தரிப்பினால் அந்த வீதியில் உள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள், பெண்கள் உட்பட பொதுமக்கள் பிரயாணிக்க முடியாது பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்க வேண்டியுள்ளது.
ஏற்கனவே, இந்த வீதியில் அமைக்கப்பட்ட இந்த வாகன தரிப்பிடத்தால் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வரும் நிலையில் மீண்டும் இந்த வாகன தரிப்பிடத்தை விஸ்தரிப்பது இந்த வீதியில் சுதந்திரமாக குடியிருந்து வரும் எங்களை எடுக்கும் செயலாகும் ஏசி அறையில் இருந்து கொண்டு முடிவெடுத்த அதிகாரிகள் எவரும் இந்த வீதியில் வசிப்பவர்கள் அல்ல.
அவர்கள் வேறு பகுதிகளில் பெரிய வீடுகள் கட்டி சுகபோகம் செய்பவர்களுக்கு நாங்கள் ஒரு சிறிய பகுதியில் சிறிய வீடுகளை கட்டி அதில் 3 குடும்பங்கள் என பல்வேறு கஷ்டத்துக்கு மத்தியில் வாழ்ந்து வரும் ஏழைகள்.
எனவே, குறித்த வாகன தரிப்பிடத்தை தற்காலிக கொட்டகை அமைத்து விஸ்தரிப்பதை நிறுத்தி எங்களை சுதந்திரமாக வாழ வழி செய்யவும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

