கிண்ணியா உப்பாறு கரையோரம் கடலரிப்பால் பாதிப்பு
திருகோணமலை - கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உப்பாறு பகுதி கரையோரம் கடலரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உப்பாறு பகுதி கரையோரம் பகுதியில் அலையின் வேகம் அதிகரிப்பு காரணமாக, கடல் நீரானது வீதியை அண்டி உட்புகுவதனை அவதானிக்க முடிவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடலரிப்பு
மேலும், குறித்த பகுதியின் கரையோரம் மிக நீண்ட காலமாக பாதிப்படைந்துள்ளதால் கரையோரத்தை அண்டிய குடியிருப்பாளர்கள் பெரும் அச்சத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில், உப்பாறு பகுதி கரையோரம் பகுதியில் கடல் அரிப்புக்கான காரணமாக மண் அகழ்வு , திட்டமிடப்படாத சட்ட விரோத கரையோர கட்டுமாண பணிகள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கிண்ணியா - மட்டக்களப்பு பிரதான வீதி சிறுவர் பூங்கா ஊடாக, உப்பாறு வரையான கரையோரம் பகுதிகளே இவ்வாறு கடலரிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


