தோட்டப்பகுதிகளில் நகர குப்பைகள் கொட்டப்பட்டதாக குற்றச்சாட்டு - சிசிடிவியில் சிக்கிய நகர சபை ஊழியர்கள்
ஹட்டன் நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட கண்ணாடித் துண்டுகள், யூரியா பைகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுப் பொருட்களை, ஹட்டன் - டிக்கோயா நகர சபை ஊழியர்கள் சிலர் டிக்கோயா தோட்டப் பகுதிக்கு கொண்டு சென்று கொட்டியதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(07.10.2026) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஹட்டன் - டிக்கோயா நகர சபை ஊழியர்கள் சிலர் ஹட்டன் வர்த்தக நிலையங்களில் இருந்து சேமிக்கப்பட்ட குப்பைகளை நகரத்திற்கு அருகில் கொண்டு வந்துக் கொட்டியுள்ளனர்.
இவர்கள், இவ்வாறு கழிவுப் பொருட்களை தோட்டப் பகுதியில் கொட்டப்படும் காட்சிகள் அங்குள்ள சிசிரிவி கேமராக்களிலும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக டிக்கோயா தோட்ட நிர்வாகத்தினரால் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் செய்யப்பட்டுள்ளது.
ஹட்டன் நகரில் குப்பை பிரச்சினை
இந்த நிலையில், ஹட்டன் நகரில் ஏற்கனவே கடுமையான கழிவுப் பொருள் பிரச்சினை ஏற்பட்டுள்ள நிலையில், நகரில் சேகரிக்கப்படும் கழிவுகளை தோட்டப் பகுதிகளில் கொட்டுவதன் மூலம், ஹட்டன் பிரதேசத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கழிவுகளை சட்டவிரோதமாக அகற்றுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்துவதுடன், ஹட்டன் நகரில் நிலவும் கழிவுப் பொருள் பிரச்சினைக்கு முறையான மற்றும் நிரந்தர தீர்வொன்றை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri