யாழ்.மாநகர சபை குழப்பங்களை திசை திருப்பவே எம்மீது வீண் பழி சுமத்தினார்கள்: கு. விக்னேஷ் (Photos)

Jaffna Sri Lanka Politician Sri Lankan political crisis Northern Province of Sri Lanka
By Theepan Mar 01, 2023 07:38 PM GMT
Report

யாழ்ப்பாண மாநகர சபையின் குழப்பங்கள் திசை திருப்பவே, வர்த்தக கண்காட்சி நடத்துபவர்கள் வரி செலுத்த வில்லை என எம் மீது அபாண்டமான பழியை சுமத்தியுள்ளனர் என யாழ். வர்த்தக தொழில்துறை மன்ற தலைவர் கு. விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட வேளை ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில்,

யாழ்.மாநகர சபை குழப்பங்களை திசை திருப்பவே எம்மீது வீண் பழி சுமத்தினார்கள்: கு. விக்னேஷ் (Photos) | Municipal Council Blamed Diverting The Confusion

வரிச் சலுகை

கடந்த வருடங்களில் நடைபெற்ற வர்த்தக கண்காட்சிகளின் போது, மாநகர சபைக்கு செலுத்த வேண்டிய பணத்தினை செலுத்தவில்லை என சபையில் பிரஸ்தாபிக்கப்பட்டதாக ஊடக செய்திகள் மூலம் அறிந்து கொண்டோம்.

நாம் செலுத்த வேண்டிய பணம் என எமக்கு உத்தியோகபூர்வமாக 17ஆம் திகதியே அறிவித்தனர். ஆனால் 15 ஆம் திகதி நாம் பணம் செலுத்தவில்லை என செய்திகள் வெளியாகி இருந்தன.

எமக்கு எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என அறிவிக்காமல் எம்மால் எவ்வாறு பணத்தினை செலுத்த முடியும்? கடந்த காலங்களில் ஆணையாளரின் கட்டுப்பாட்டில் மாநகர சபை இருந்த வேளைகளில் நாம் வரி சலுகைகளை பெற்றுக்கொண்டோம்.உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதற்காகவே வரி சலுகைகளை கேட்டிருந்தோம்.

யாழ்.மாநகர சபை குழப்பங்களை திசை திருப்பவே எம்மீது வீண் பழி சுமத்தினார்கள்: கு. விக்னேஷ் (Photos) | Municipal Council Blamed Diverting The Confusion

மக்களுக்காக மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் கைகளுக்கு சபை சென்ற பின்னர் நாம் வரி சலுகைகளை கோரிய போது சபை அனுமதி பெற வேண்டும் என்றும் சபையில் அனுமதி கிடைக்கவில்லை என்றும் காலம் தாழ்த்தி பதில்களும் அளித்தனர்.

மாநகர சபைக்கு பணம் செலுத்தவில்லை

நாம் மாநகர சபைக்கு பணம் செலுத்தவில்லை என வெளியான செய்திகள் தொடர்பில் நாம் ஆராய்ந்த போது , மாநகர சபையின் சிலர் உறுப்பினர்கள் தமது அரசியல் சுய இலாபத்திற்காகவும், மாநகர சபையில் அண்மைக்காலமாக காணப்படும் குழப்ப நிலைமைகள் தொடர்பிலான செய்திகளை திசை திருப்பவே எம் மீது பழி சுமத்தி செய்திகளை வெளிவர செய்துள்ளதாக அறிந்து கொண்டோம்.

நீண்ட காலமாக நாம் மாநகர சபைக்கு பணம் செலுத்தவில்லை என எம் மீது குற்றம் சுமத்துபவர்கள் ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.மாநகர சபைக்கு கிடைக்க வேண்டிய பணத்தினை நாம் கொடுக்காது இருந்தால், எம் மீது சட்ட நடவடிக்கை எடுத்து இருக்கலாமே? ஏன் எடுக்கவில்லை.

யாழ்.மாநகர சபை குழப்பங்களை திசை திருப்பவே எம்மீது வீண் பழி சுமத்தினார்கள்: கு. விக்னேஷ் (Photos) | Municipal Council Blamed Diverting The Confusion

வர்த்தக கண்காட்சியின் போது , விற்கப்படும் தலா ஒவ்வொரு நுழைவு சீட்டுக்கும் 12 வீத வரி செலுத்துகிறோம்.அது மட்டுமன்றி காட்சி கூடத்திற்கு வரி செலுத்துகிறோம்.

கழிவகற்றலுக்கு பணம் செலுத்துகிறோம், கண்காட்சி வளாகத்தை சுற்றி கட்டப்படும் கொடிகள் முதற்கொண்டு சிறிய விளம்பர பதாகைகள் வரை அனைத்திற்கும் மாநகர சபைக்கு பணம் செலுத்தியே நாம் கண்காட்சியை நாடத்துகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச வர்த்தக கண்டகாட்சி

அதேவேளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தக கண்டகாட்சியில், 250 கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கொழும்பில் உள்ள பெரிய நிறுவனங்கள் தொடக்கம் யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிய தர தொழில் முயற்சியாளர் வரைக்கும் அனைவருக்கும் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கவுள்ளோம்.

இம்முறை நுழைவு சீட்டாக 100 ரூபாய் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.அத்துடன் பாடசாலை மாணவர்கள் சீருடையுடன் வருகை தந்தால் அவர்களை இலவசமாக அனுமதிக்கவுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US