எஹெலியகொடையில் பல வாகனங்கள் மோதி விபத்து: 10 பேர் காயம்
எஹெலியகொடை பகுதியில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஏனைய வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 10 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய தினம் இரவு 7.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அதிவேகமாக வந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் பயணித்துக்கொண்டிருந்த ஏனைய வாகனங்கள் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தின் போது ஒரு மோட்டார் சைக்கிள், மூன்று முச்சக்கர வண்டிகள் மற்றும் இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்துள்ளன.
ஆரம்பகட்ட தகவல்களின்படி, இந்த விபத்தில் காயமடைந்த 10 பேர் சிகிச்சைகளுக்காக எஹெலியகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri