முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் கர்மாரம்ப கிரியைகளுடன் தொடங்கி சிறப்புற நடைபெற்று வருகிறது.
வெள்ளைக்கை நாச்சியாரால் வழிபட்டதும் பரராசசேகர மன்னரால் பல திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதுமான முள்ளியவளை காட்டுவிநாயகப் பெருமானுக்கு ஒன்பது தளங்கள் கொண்ட இராஜகோபுரம் புதிதாக அமைக்கப்பட்டு புனருத்தாபன பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் எதிர்வரும் 20ஆம் திகதி (20.03.2024) நடைபெற உள்ளது.
திருப்பணி வேலைகள்
முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயம் முல்லைத்தீவு மாவட்டத்தில் வரலாற்று சிறப்புபெற்ற ஒரு ஆலயமாக காணப்படுகின்றது.
இந்த ஆலயத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு பாலஸ்தானம் இடம்பெற்று திருப்பணி வேலைகள் நடைபெற்றன.
கும்பாபிஷேக நிகழ்வின் மூலாலய பிரதிஷ்டா பிரதம குருவாக ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ கா.இரகுநாதக்குருக்கள் தலைமையில் வடக்கில் உள்ள பல முதன்மை குருமார்களின் பங்குபற்றலுடன் கடந்த 14.03.2024 அன்று தொடங்கிய கிரியைகள் 17ஆம்,18ஆம்,19ஆம் திகதிகளில் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு சிறப்புற நடைபெற்று 20.03.2024 அன்று மஹா கும்பாவிஷேகம் சிறப்புற நடைபெறவுள்ளது.