முள்ளிவாய்க்காலில் தலைவர் கூறியதே இன்று எமக்கு நடக்கிறது!: கதிர் பகிரங்கம் (Video)
“தலைவருடைய தீர்க்கதரிசனமான சிந்தனைகளும், எண்ணங்களின் படியே எங்களுடைய அரசியல் ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் கதிர் தெரிவித்துள்ளார்.
எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
“நாங்கள் முள்ளிவாய்க்காலில் இருந்து தயார்ப்படுத்தப்பட்ட ஒரு அணியாகத்தான் அரசியலுக்கு வந்தோம்.
அங்கு எங்கள் தலைமை எங்களுக்கு சொன்னது என்ன வென்றால் “நீங்கள் இலங்கை அரசாங்கத்திடம் சென்று அங்கே இராணுவத்தின் பிடிக்குள் இருந்து வெளியே வந்து அரசியல் செய்வது என்பது மிகவும் ஒரு கடினமானதாக இருக்கும். ஏனென்றால், அங்கே இருக்கும் அரசியல்வாதிகள் பலமானவர்கள் உங்களை துரோகிகள் என்றுக்கூட பட்டம் சூட்டுவார்கள். அந்த சவால்கள் அனைத்தையும் உடைத்து எறிந்துகொண்டு தான் வெளியில் வந்து நீங்கள் அரசியல் செய்ய வேண்டும். அந்த அளவிற்கு நீங்கள் உங்கள் அறிவாற்றல்களை வளர்த்துகொள்ள வேண்டும் என தலைமைப்பீடத்தினால் அறிவுரைகள் வழங்கப்பட்டது.”
மேலும், “தலைவருடைய தீர்க்கதரிசனமான சிந்தனைகளும், எண்ணங்களும் இங்கு நடைபெறுகின்றது. அதே போன்று அவருடைய சிந்தனைகள் மற்றும் எண்ணங்களின் படியே எங்களுடைய அரசியல் ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.”
எமது தலைவர் கூறியது என்னவென்றால், “போர் என்பது எமக்கு இலகுவானது, ஆனால் அரசியல் என்பது மிகவும் ஆபத்தானது. அரசியலில் சிறிய பாம்பாக இருந்தாலும் பெரிய தடி எடுத்து அடிக்க வேண்டும் என்பதை தலைவர் எமக்கு கூறியிருக்கின்றார்” எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam