தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் பூர்த்தி
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூத்தியாகியுள்ளன.
அந்தவகையில் தமிழினப்படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று(18) காலை 07.00 மணிதொடக்கம் 09.30மணிவரை முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப் பகுதியில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது உயிர்நீத்தவர்களுக்குரிய பிதிர்க்கடன் நிறைவேற்றும் கிரிகைகள் இடம்பெறவுள்ளது.
அத்தோடு முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள புனித பவுல் தேவாலயதில் 08.30 மணிக்கு விசேட திருப்பலி ஆராதனைகளும் இடம்பெறவுள்ளது.
அதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பொதுச் சுடரேற்றப்பட்டு தமிழினப்படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் அனைவரையும் பங்குபற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |