முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் பொலிஸாரின் மிக மோசமான செயற்பாடு! கொதித்தெழும் தமிழ் சமூகம்
திருகோணமலை சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்த பெண்களை நள்ளிரவில் வீடு புகுந்து பொலிஸார் கைதுசெய்ததை மிக மோசமாக செயற்பட்டதை கடுமையாக கண்டிக்கின்றோம் என்று சமூக செயற்பாட்டாளர் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
முடித்து வைக்கப்பட்ட யுத்தம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
துக்கதினத்தை கூட அனுஸ்டிக்கும் உரிமை இலங்கையில் தமிழர்களிற்கு இல்லை.
2009ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையின் மூன்று தசாப்தபோர் மிகவும் மோசமான முறையில் இலங்கை அரசாங்கத்தினால் முடித்துவைக்கப்பட்டது.
தமிழ்மக்கள் தங்கள் நாட்டின் பிரஜைகள் என்ற கரிசனையில்லாமல் குண்டு வீசி கொத்துகொத்தாக கொல்லப்பட்டனர். சரணடைந்தவர்கள் காணாமலாக்கப்பட்டனர். இவர்களை நினைகூரும்வகையில் முள்ளிவாய்க்கால் வாரம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
உணவு இல்லாததால் உணவு கிடைக்காததால் தண்ணீர் கலந்த அரிசியை கஞ்சியை குடித்து உயிர்வாழ்ந்தனர். அதனை நினைகூரும் வகையிலேயே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்படுகின்றது.
அந்த மக்கள் 15 வருடங்கள் கடந்த பின்னரும் எந்த நீதியையும் பெறாமல் வாழ்கின்றனர். அரசாங்கம் அவர்களிற்கு எந்த ஒரு நீதியையும் வழங்கவில்லை எந்தவொரு முடிவையும் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |