முள்ளிவாய்க்கால் வடுக்களை அடுத்த சந்ததிக்கு கடத்தும் நித்தம் சஞ்சிகை
நித்தம் மாதசஞ்சிகையின் வைகாசிமாத இதழ் முல்லைத்தீவு - முல்லைக் கல்வி நிலையத்தில் வெளியீடுசெய்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார்.
அந்தவகையில் விசேடமாக முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பதிவுகளைத் தாங்கிவந்த நித்தம் மாதசஞ்சிகையின் வைகாசி மாத இதழ் வெளியீட்டுவிழாவானது முல்லைத்தீவு, முல்லைக்கல்விநிலைய நிர்வாகி தேவராசா தேவசாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
நித்தம் மாதசஞ்சிகை
இந் நிகழ்வில் விருந்தினர்களது உரைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து நித்தம் மாதசஞ்சிகையின் வைகாசி மாத இதழ் வெளியீடு செய்யப்பட்டது.
அந்தவகையில் நித்தம் மாதசஞ்சிகையின் பிரதம ஆசிரியர் நாராயணமூர்த்தி நகுலேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் நித்தம் மாதசஞ்சிகையின் வைகாசிமாத இதழின் முதற்பிரதியைக் கையளித்தார்.
அதனைத் தொடர்ந்து வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கல்விநிலைய மாணவர்கள், ஆசிரியர்களிடம் சஞ்சிகையின் ஏனைய பிரதிகள் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


வெளியேறிய நடிகை, ஆனால் மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஸ்பெஷல் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam

திருமணமான 4வது நாளில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட புதுப்பெண்! மற்றொரு அதிர்ச்சி சம்பவம் News Lankasri
