தமிழர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிப்பு..!
கிளிநொச்சி - கோணாவல் பகுதியில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் நேற்று(14-05-2026) பகல் நடைபெற்றுள்ளது.
யுத்தத்தின்போது கொள்ளப்பட்ட மக்களுக்கான வணக்க நிகழ்வும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு தமிழர் தாயகமெங்கும் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையிலே இன்றைய தினம் கிளிநொச்சி கோனாவில் பிரதேசத்தில் குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது, உயிரிழந்தவர்களுக்காக சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டதையடுத்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிடுள்ளனர்.

தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
கிளிநொச்சி பொதுச்சந்தை
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இன்றை நான்காவது நாளான இன்று(15.05.2025) கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்களின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பொதுச்சந்தை முன்பாக இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வும் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டுள்ளது.
யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு பொதுச்சுடர் ஏற்றி, மலர் அஞ்சலி செலுத்திப்பட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.


மேலதிக தகவல் - தேவந்தன்
மட்டக்களப்பு - பட்டிருப்பு
கடந்த யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிருக்குப் போராடிய மக்கள் உப்புக்கூட இல்லாமல் தங்களிடமிருந்த அசிரியை வைத்துக் கொண்டு கஞ்சி காய்ச்சி அவர்களது பசியைப் போக்கியிருந்தனர்.
இதனை நினைவு கூறும் முகமாக மட்டக்களப்பு மாவட்டம் - பட்டிருப்பு பாலத்தருக்கில் இன்றயதினம் வெள்ளிக்கிழமை(15.05.2026) முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி, சிரட்டைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
அந்தப் பகுதி பொதுமக்களால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது அங்கிருந்த மக்கள் விருப்புடன் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சியை அருந்தியுள்ளனர்.


மேலதிக தகவல் - ருஷாத்
பெரியபண்டிவிரிச்சான் - கிழக்கு
மன்னார் மாவட்ட போராளிகள் நலன்புரி சங்கத்தின் அனுசரணையுடன், பொது மக்களின் ஏற்பாட்டில், மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் - கிழக்கு பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
குறித்த நிகழ்வு இன்றைய தினம் (15.05.2026) காலை 11.45 மணி அளவில் பெரியபண்டிவிரிச்சான் மரிய கொறட்டி தேவாலய வளாகத்தில் இடம் பெற்றிருந்ததோடு, தேவாலயத்திற்கு முன்பு வீதியால் சென்றவர்களுக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், மதகுருக்கள், இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல் - ஆஷிக்
திருகோணமலை - பள்ளிக்குடியிருப்பு
முள்ளிவாய்க்கால் போர்ப் பேரவலத்தின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, திருகோணமலை - பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை (15.05.2026) மாலை மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது.
திருகோணமலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நாளில், போரின் இறுதிக்கட்டத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து அஞ்சலிகள் செலுத்தப்பட்டுள்ளன.

போரில் உயிரிழந்த பொதுமக்களின் நினைவாக பிரதான சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி மரியாதை செய்யப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்த ஆன்மாக்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி கடைபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் பள்ளிக்குடியிருப்பு மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொண்டு தமது மறைந்த உறவுகளுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மேலதிக தகவல் - கியாஸ்
பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் News Lankasri
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam