மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வினை தடுத்த பொலிஸார்
மட்டக்களப்பு (Batticaloa) நகர் நுளைவாயில் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வை தடுக்கும் வகையில் பொலிஸார் செயற்பட்டுள்ளனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் ஆறாவது நாளான இன்று (17.05.2024) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த கஞ்சி வழங்கும் நிகழ்வின் போது, திடீரென அந்த பகுதி வீதியில் பொலிஸார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பொலிஸாரின் நடவடிக்கை
இதன்போது வாகனங்களை நிறுத்தி பொதுமக்கள் கஞ்சி குடிப்பதற்காக சென்றபோது அவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இருப்பினும், பொலிஸாரின் தடைகளை மீறி பெதுமக்கள் வாகனங்களை நிறுத்தி கஞ்சியை வாங்கி குடித்துள்ளனர்.
அதேவேளை, கஞ்சி வழங்கும் நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியேந்திரன், ஞா.சிறீதரன் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சி தலைவர் உள்ளிட்ட பலரும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |










சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்தார் பாருங்க.. புகைப்படம் இதோ Cineulagam
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam