பிரித்தானிய தமிழர் பேரவையால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுப்பு
புதிய இணைப்பு
தமிழர் மத்தியில் இன்று, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 16ஆவது ஆண்டு நிறைவுநாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், பிரித்தானிய தமிழர் பேரவையால் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் இன்று நினைவுகூரப்பட்டனர்.
முதலாம் இணைப்பு
பிரித்தானியா - லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் தமிழீழ சுயநிர்ணய அமைப்பு தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் இருமுறை முன்னெடுத்துவரும் குருதிக்கொடை நிகழ்வின் 2025ம் ஆண்டிற்கான நிகழ்வு இம்முறையும் லண்டன், லெஸ்டர், பேர்மிங்காம் மற்றும் ஸ்கொட்லாண்ட் பகுதிகளிலுள்ள குருதிக்கொடை நிலையங்களில் மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு மே மாதத்தில் நிகழ்த்தப்பட்ட இறுதி யுத்த காலப்பகுதியில் தமிழீழ மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையைச் செய்தியை எதிர்கால சந்ததிக்கு கடத்திச் செல்லும் முகமாக இந்தக் குருதிக்கொடை நிகழ்வானது மக்களால் மேற்கொள்ளப்படுகின்றது.
அந்தவகையில், மே மாதம் 16ம் திகதி வெள்ளிக்கிழமையன்று ஸ்கொட்லாண்ட் பிரதேசத்திலும் 17, 18ம் திகதிகளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் லண்டன் வெஸ்ட்பீல்ட் பகுதியிலுமாக 150ற்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்களின் பங்கேற்புடன் இந்தக் குருதிக்கொடை நிகழ்வானது நடைபெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க துணைக்காக எதையும் துணிச்சலாக செய்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
