தமிழர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 4 ஆவது நாளாகவும் அனுஷ்டிப்பு

Sri Lankan Tamils Batticaloa Mullivaikal Remembrance Day Sri Lanka Eastern Province
By Rusath May 16, 2026 08:55 AM GMT
Report

 முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உணர்பூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் மட்டக்களப்பு - போரதீவுபற்று பிரதேச சபைக்கு முன்பாக நேற்றைய தினம்(15.05.2026) முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி, சிரட்டைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மலையகத்தில் தொடரும் வன்முறை.. பொது பாதுகாப்பு அமைச்சர் மேற்கொள்ளவுள்ள முக்கிய கலந்துரையாடல்

மலையகத்தில் தொடரும் வன்முறை.. பொது பாதுகாப்பு அமைச்சர் மேற்கொள்ளவுள்ள முக்கிய கலந்துரையாடல்

அந்தப் பகுதியிலுள்ள பொதுமக்களால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது அங்கிருந்த மக்கள் விருப்புடன் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சியை அருந்தியுள்ளனர்.

தமிழர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 4 ஆவது நாளாகவும் அனுஷ்டிப்பு | Mullivaikkal Commemoration 4Th Day In Tamil Areas

தமிழர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 4 ஆவது நாளாகவும் அனுஷ்டிப்பு | Mullivaikkal Commemoration 4Th Day In Tamil Areas

வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்கவும்..! சம்பத் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்கவும்..! சம்பத் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

தியாக தீபம் திலீபன் நினைவையொட்டி நல்லூரில் இடம்பெறவுள்ள சதுரங்கச் சுற்றுப்போட்டி

தியாக தீபம் திலீபன் நினைவையொட்டி நல்லூரில் இடம்பெறவுள்ள சதுரங்கச் சுற்றுப்போட்டி

 யாழ்ப்பாணம் - வடமராட்சி

 யாழ்ப்பாணம் - வடமராட்சி, கிழக்கு அம்மன் பகுதியிலும் பிரதேச இளைஞர்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வாழ்ங்கல் நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது.

அம்பன் கொட்டோடை சந்தியில் இடம் பெற்ற நிகழ்வில் முதல் நிகழ்வாக பொது ஈகைச் சுடரினை குடத்தனை வட்டார பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் அகஸ்டின் ஆசிரியர் பொது ஈகை சுடரை ஏற்றி வைத்துள்ளார்.

ஈகைச் சுடர்கள் பருத்தித் துறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஆனந்தராஜா சுரேஷ்குமார் ஏற்றிவைத்ததை தொடர்ந்து மாவீரர்களின் உறவுகளான த. இன்பராசா, ம.ஜெயந்திமலர் மற்றும் மயில்வாகனம் உட்பட அனைவரும் ஏற்றி வைத்துள்ளனர்.

அதனை தொடர்ந்து, மலர் வணக்கத்தினை பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி ஆரம்பித்துவைக்க அனைவரும் மலர் அஞ்சலியை செலுத்தியத்தை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவாக உப்பு கஞ்சியை ஊடகவியலாளர் ரெஜி வழங்கி வைத்துள்ளார்.

இந்த நிகழ்வில், பருத்தித்துறை பிரதேச சபை குடத்தனை வட்டார உறுப்பினர் அகஸ்டின் ஆசிரியர், முன்னாள் உறுப்பினர் ஆனந்தராசா சுரேஷ்குமார், பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெயனந்தம் ஜெயகோபி, மற்றும் பிரதேச மக்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர். 

மேலதிக தகவல் - காந்தீபன்

செம்பியன்பற்று

 யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று(16.05.2026) காலை 9:30 மணியளவில் செம்பியன்பற்று தேவாலயம் முன்பாக உணர்வு பூர்வமாக இடம்பெற்றுள்ளது.

நிகழ்வின் ஆரம்பத்தில் செம்பியன் பற்று பங்கு தந்தை யாஸ்டின் ஆதரால் விசேட வழிபாடு ஒன்றுஇடம்பறெ்றுள்ளது. பின்னர் ஊடகவியலாளர் லின்ரன் தலைமையில் நிகழ்வு ஆரம்பிக்கப்படடுள்ளது.

இதன் போது, இறுதிப்போரில் தனது தந்தையையும் மகனையும் இழந்த குடும்பஸ்தர் ஒருவரால் பொது ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, தமிழின படுகொலையை ஞாபகப்படுத்தும் முகமாக உப்பு கஞ்சி வழங்கப்பபட்டுள்ளது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் மத குருமார்கள், புலம்பெயர் மக்கள், சிறுவர்கள், இளைஞர்கள், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் அகஸ்டின், பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெய கோபி, சிரேஸ்ட ஊடகவியலாளர் காண்டீபன் மற்றும் குடத்தனை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ரெஜி என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலதிக தகவல் - காந்தீபன்

 மானிப்பாய் - பொதுச்சந்தை 

ரணம் மிகுந்த இந்த மே மாதத்தில் மண்ணில் பட்ட வலிகளை கடத்து முனைப்புடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று(16.05.2026) காலை 9.00 மணிக்கு மானிப்பாய் பொதுச்சந்தை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 4 ஆவது நாளாகவும் அனுஷ்டிப்பு | Mullivaikkal Commemoration 4Th Day In Tamil Areas

சந்தை வர்த்தகர்களின் ஆதரவில் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் கலொக் கணநாதன் உஷாந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன், பிரதேச சபை உறுப்பினர்கள், மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சியை வழங்கி வைத்துள்ளனர்.  

தமிழர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 4 ஆவது நாளாகவும் அனுஷ்டிப்பு | Mullivaikkal Commemoration 4Th Day In Tamil Areas 

மேலதிக தகவல் - பிரதீபன்

 யாழ்.பல்கலைக்கழக விவசாய பீடம் 

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று(16-05-2026) யாழ் . பல்கலைக்கழக விவசாய பீட மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.

யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டதையடுத்து கஞ்சி பரிமாறப்பட்டுள்ளது. 

இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வானது முறிகண்டி பிள்ளையார் ஆலய முன்றலில் வர்த்தகர்கள் பிரதேச பொது அமைப்புகள் ஏற்பாட்டில் நடைபெற்றது.

மேலதிக தகவல் - சுடரோன்


மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US