முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வவுனியாவில் அஞ்சலி
முள்ளிவாய்கால் 15ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வவுனியா (Vavuniya), பண்டாரிக்குளத்தில்
முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள இளைஞர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் பலர் இணைந்து கஞ்சியை பண்டாரிக்குளம் பிரதான வீதியில் வைத்து இன்று (18.05.2024) வழங்கி வைத்துள்ளனர்.
அடுத்த தலைமுறை
2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது மக்கள் முள்ளிவாய்கால் கஞ்சியினை உணவாக உட்கொண்டே உயிர் பிழைத்துள்ளனர்.
இதன் 15 ஆவது ஆண்டினை நினைவு கூர்ந்தும், அடுத்த தலைமுறைக்கு வரலாற்றை கடத்தும் நோக்குடன் இவ்வாறு கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வீதியால் சென்ற பலரும் அதனை வாங்கி பருகிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், வவுனியா குருமண் காடு காளி கோயில் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில் விசேட ஆத்மசாந்தி பூசையும் பிரார்த்தனையும் இடம்பெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri

திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.. புகைப்படம் இதோ Cineulagam

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
