யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தினால் 2009 ஆண்டு இலங்கை படைத்தரப்புக்களால் முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட தமிழினப்படுகொலையை நினைவு கூறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது .
இந்த நிகழ்வு இன்று (14.05.2024) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீட நுழைவாயிலில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில், இறுதிக்கட்டப் போரின் போது தமிழ் மக்களின் உயிர்காத்த உணவான முள்ளிவாய்க்கால் கஞ்சி விரிவுரையாளர்கள், ஊழியர்கள், மாணவர்களினால் வழங்கப்பட்டுள்ளது.
குருதிக் கொடை
இதேவேளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் 2009 ஆம் ஆண்டு
முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவேந்தி குருதிக்
கொடை நிகழ்வும் இன்று (14.05.2024) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக
மாணவர் கட்டடத் தொகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






















தமிழ்நாடு தனது பண்பாட்டை இழக்கிறதா! 18 மணி நேரம் முன்

இந்திய போர் விமானங்களை வீழ்த்த பாகிஸ்தான் பயன்படுத்திய J-10C., சீனா வெளியிட்ட ஆவணப்படம் News Lankasri

ஜீ தமிழின் பிர்ம்மாண்ட நிகழ்ச்சியான சரிகமப 5வது சீசனில் புதிய நடுவர்.... இனி இசையோடு பஞ்ச் தெறிக்க போகுது.. Cineulagam
