விடுதலைப் புலிகளின் தலைவரின் காலத்திற்கு பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றம்! முள்ளிவாய்க்கால் மக்கள்-செய்திகளின் தொகுப்பு
எங்களுக்கு நடந்த கொடுமைகள் போன்று இனி இந்த உலகத்தில் எந்த இனத்திற்கும் நடக்கக்கூடாது. இதைத்தான் நாங்கள் கேட்டு மன்றாடுகிறோம் என முள்ளிவாய்க்கால் மண்ணில் வாழும் பலர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கையில், 30 வருடங்களாக எங்களை பாதுகாத்து வந்தவர் பிரபாகரன் இப்போது இருக்கின்ற களவுகளோ, சமூக சீர்கேடுகளோ எதுவும் அப்போது இருந்ததாக இல்லை. ஆனால் இப்போது அவையெல்லாம் தலைவிரித்து தாண்டவம் ஆடுகின்றது.
மே-18 என்பது எங்களால் ஒருபோதும் மறக்க முடியாது. அந்த நாட்கள் மிகவும் கொடுமையான நாட்கள் பசி, பட்டினி, துன்பம், இறப்பு மற்றும் காயம் என துன்ப துயரங்களோடு நாங்கள் கடந்து சென்ற அந்த நாள் தான் மே-18.
பலர் இதை மறந்தாலும் இழப்புகளோடும், வலிகளோடும் இந்த மண்ணிலே இருந்து சென்ற
எங்களால் ஒருபோதும் மறக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,



