தலைமன்னாரில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் இரங்கல் திருப்பலி தலைமன்னார் மேற்கு புனித லோறன்சியார் தேவாலயத்தில் இன்று (18.05.2024) காலை ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.
அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தலைமையில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதோடு, முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்காக விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு இறந்த உறவுகளுக்காக மலர் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி
இரங்கல் திருப்பலியை தொடர்ந்து ஆலய வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி காய்ச்சப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன் போது தென் பகுதியில் இருந்து தலைமன்னார் பகுதிக்கு சுற்றுலா வந்த சிங்கள மக்களுக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து தெளிவு படுத்தப்பட்ட நிலையில் அவர்களும் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியை பெற்றுக்கொண்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இரங்கல் திருப்பலி மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கும் நிகழ்வை ஆலய அருட்பணி பேரவை,மற்றும் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்தார் பாருங்க.. புகைப்படம் இதோ Cineulagam
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri