யுத்தத்தால் உயிரிழந்த உறவுகளுக்கு வவுனியாவில் அஞ்சலி (Video)

Sri Lankan Tamils Tamils Vavuniya Mullivaikal Remembrance Day
By Thileepan May 18, 2023 04:20 PM GMT
Report

யுத்தத்தால் உயிரிழந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது சமாதான புறாக்களும் பறக்க விடப்பட்டுள்ளன.

வவுனியா மாநகரசபை மைதானத்தில் இன்று (18.05.2023) மாலை 5.30 மணிக்கு வன்னி மக்கள் ஒன்றியம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.


கொடிய யுத்தம்

2009 ஆம் ஆண்டு கொடிய யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இந்த நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒரு தாய் பிள்ளைகளாக ஒற்றுமையாகவும், சமாதானமாகவும் வாழ்ந்து வருகின்றார்கள்.

கொடிய யுத்தத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் பலர் இறந்துள்ளார்கள். அவர்களுக்கு ஆத்ம சாந்தி வேண்டி பௌத்த பிக்குகள், இந்து மதகுருமார், கத்தோலிக்க மதகுருமார், இஸ்லாமிய மதகுரு ஆகியோரின் ஆசிகளுடன் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

யுத்தத்தால் உயிரிழந்த உறவுகளுக்கு வவுனியாவில் அஞ்சலி (Video) | Mullivaikal Remembrance Day In Vavuniya

பிரதான சுடரினை மதத் தலைவர்களும், அதிதிகளும் ஒன்றிணைந்து ஏற்றி வைக்க, ஏனைய சுடர்களை பொதுமக்கள் ஏற்றி வைத்ததுடன், இறந்தவர்கள் நினைவாக தென்னம் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டுள்ளன.அத்துடன் சமாதானத்தையும், ஐக்கியத்தையும் வலியுறுத்தி மதத்தலைவர்களால் புறாக்களும் பறக்கவிடப்பட்டுள்ளன.

யுத்தத்தால் உயிரிழந்த உறவுகளுக்கு வவுனியாவில் அஞ்சலி (Video) | Mullivaikal Remembrance Day In Vavuniya

சிங்கள மக்கள் பங்கேற்பு

யுத்தத்தால் உயிரிழந்த உறவுகளுக்கு வவுனியாவில் அஞ்சலி (Video) | Mullivaikal Remembrance Day In Vavuniya

இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.பி.நடராஜா, இலங்கை தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர் என்.கருணாநிதி மற்றும் சிவசேனை அமைப்பினர், வர்த்தக சங்க தலைவர், முச்சக்கரவண்டி சங்க தலைவர், வவுனியா கந்தசாமி கோவில் நிர்வாகத்தினர், ஐக்கிய தேசியக் கட்சியினர், நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்ட பலரும் கட்சி, இன, மத வேறுபாடின்றி கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

யுத்தத்தால் உயிரிழந்த உறவுகளுக்கு வவுனியாவில் அஞ்சலி (Video) | Mullivaikal Remembrance Day In Vavuniya

இதேவேளை, நிகழ்வில் அதிகளவிலான சிங்கள மக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் அனுஸ்டிக்கப்பட்டது.

பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் உள்ள கொட்டகைக்கு முன்பாக மலர் தூவி மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்தி பின்னர் அமைதி வழி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தால் உயிரிழந்த உறவுகளுக்கு வவுனியாவில் அஞ்சலி (Video) | Mullivaikal Remembrance Day In Vavuniya

யுத்தத்தால் உயிரிழந்த உறவுகளுக்கு வவுனியாவில் அஞ்சலி (Video) | Mullivaikal Remembrance Day In Vavuniya

யுத்தத்தால் உயிரிழந்த உறவுகளுக்கு வவுனியாவில் அஞ்சலி (Video) | Mullivaikal Remembrance Day In Vavuniya

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US