கிளிநொச்சி இரணைமடுவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
முள்ளிவாய்க்கால் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று(18) கிளிநொச்சி (Kilinochchi) இரணைமடு சந்தியில் தமிழ் தேசிய இளைஞர் பேரவையின் பிரதித் தலைவர் ப.குமாரசிங்கம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக பொதுச்சுடரினை இந்து, கிறிஸ்தவ மதகுருமார்களும், தாயக செயலணியின் கிளிநொச்சி மாவட்ட தலைவர் அகிலன் அவர்களும் இணைந்து ஏற்றி வைக்க தொடர்ந்து ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டுள்ளது.
மலரஞ்சலி நிகழ்வு
இதனை தொடர்ந்து மலர் மாலையினை தமிழ் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.கீதன் அவர்களும் கிளிநொச்சி வர்த்தக பிரதிநிதி ரவி அவர்களும் இணைந்து அணிவித்தார்கள்.
தொடர்ந்து மலரஞ்சலி நிகழ்வை தமிழ் தேசிய இளைஞர் பேரவையின் நிர்வாக செயலாளர் தீபா, தமிழ் பேசிய இளைஞர் பேரவையின் சுரேஷ்ட உறுப்பினர் சாலினி ஆரம்பித்து வைக்க மலர் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |