பத்திரிகை செய்தி தொடர்பில் நாடாளுமன்றில் பரபரப்பு: அமைச்சர் நலின் விளக்கம்
தென்னிலங்கை சிங்கள மொழி பத்திரிகை ஒன்றில் நேற்று (19.11.2025) உண்மைக்கு புறம்பான செய்தி ஒன்றை பிரசுரித்தது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – 2026 குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள மொழி பத்திரிகையொன்றில் நேற்று (19.11.2025) 'பொலிஸ் அறிக்கை பெற்றுக் கொள்வதற்கு சிவில் பொலிஸ் கமிட்டியின் கடிதம் தேவை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது' என்ற தலைப்புச் செய்தியானது உண்மைக்கு புறம்பானது என்று நேற்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரும் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
உண்மைக்கு புறம்பான செய்தி
இன்று (20.11.2025) குறித்த பத்திரிகையில் பதில் செய்தியில் கிராம சேவகரே இவ்வாறு சென்னதாக குறிப்பிட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், இவ்வாறான உண்மைக்கு புறம்பான செய்தியால் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சிறந்த ஊடகவியல் தர்மத்தின் படி செய்தியின் மூலம் பொறுப்பானவரின் கருத்தாக இருக்க வேண்டும். இதற்கு முன்னரும் இதே பத்திரிகையில் பல உண்மைக்கு புறம்பான செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், பொறுப்பான ஊடகமொன்று மக்களுக்கு உண்மையும் நியாயமான செய்திகளையே வழங்க வேண்டும் எனக் கூறிய அவர் ஊடகவியலாளர்களும் இவ்வாறான செய்திகளை சேகரிக்கும் போது பொறுப்புடன் செயற்படுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |