பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிப்பு..!
முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், பிரித்தானியாவின் சவுத்தால் (Southall) பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் வாரத்தை அனுஷ்டிக்கும் வகையில் நேற்று(13.05.2026) நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிப்பு
இந்த நிகழ்வில் தமிழ் மக்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் இறுதிக்கட்டத்தில் தமிழீழ மக்களுக்கு உணவாக வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாறும் அதன் மனிதாபிமானப் பின்னணியும் இந்த நிகழ்வின் மூலம் நினைவுகூறப்பட்டுள்ளது.

மேலும், முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாற்றுப் பின்னணி மற்றும் அதன் உன்னதத்தைக் அடுத்த தலைமுறைக்கும் வேற்றின மக்களுக்கும் எடுத்துரைக்கும் வகையில், விளக்கத் தகவல்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களும் பொதுமக்களிடம் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வு, முள்ளிவாய்க்கால் நினைவுகளை உயிர்ப்புடன் பேணிக்காக்கும் நோக்கிலும், தமிழீழ மக்களின் நீதிக்கான குரலை உலக மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாகவும் அமைந்தது.
இலங்கையில் மோசமடையும் காலநிலை! கைபேசிகளுக்கு அவசரகால எச்சரிக்கை குறுஞ்செய்தி - வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
புதிய சீரியலில் ஒன்றாக நடிக்கப்போகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகர்கள்... யார் தெரியுமா? Cineulagam
மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் News Lankasri
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam