முள்ளிவாய்க்காலிற்கு ஏன் இந்த நிலை! தேடுவாரற்றுக் கிடக்கும் ஈழத் தமிழரின் பெரும் அடையாளம்

Sri Lankan Tamils Mullivaikal Remembrance Day Sri Lanka Final War Northern Province of Sri Lanka
By Independent Writer Sep 03, 2023 06:20 PM GMT
Report

 முள்ளிவாய்கால் என்பது ஈழத் தமிழ் மக்களின் ஒரு வரலாற்று அடையாளம். பற்பரிமானத் தியாயங்களின் ஒரு அழிக்கமுடியாத உறைவிடம்.

அந்த உறைவிடத்தின் அடையாளத்தை தமிழ் இனத்தின் எதிரிகளே அழிக்க முற்பட்டுக்கொண்டிருக்கும் தருணங்களில், தமிழ் இனமே அதனை அழிக்கவும், மறைக்கவும் முற்படுகின்றதா என்கின்ற கேள்வி எழுக்கூடியவகையில் முள்ளிவாய்கால் நினைவுத்திடலும், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியும் தற்பொழுது காட்சிதந்துகொண்டிருக்கின்றது.

முள்ளிவாய்க்கால் நினைவுத்திடலும், தூபியும் தேடுவாரற்றுக் கிடப்பது கவலையளிப்பதாகவே இருக்கின்றது.

முள்ளிவாய்க்காலிற்கு ஏன் இந்த நிலை! தேடுவாரற்றுக் கிடக்கும் ஈழத் தமிழரின் பெரும் அடையாளம் | Mullivaikal Must Be Considered

நூற்றைம்பதாயிரம் மக்களை பலியெடுத்து முற்றுப்பெற்ற இந்த நிலத்தில் நடைபெற்றது இனவழிப்புத் தான் என்று உலகெங்கும் வாதாடி நிறுவ முயன்று கொண்டிருக்கும் தமிழினம், தான் வீழ்ந்த இடத்தை மறந்து போகும் பேராபத்தை எதிர்கொண்டிக்கின்றது.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை தேடி அலைந்து தான் கண்டுகொள்ள வேண்டியிருக்கிறது.

இனங்காணலை இலகுவாக்கல்

முள்ளிவாய்க்கால் வரும் எவரொருவரும் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தினை பார்த்தே போகவேண்டும்.

இல்லை குறைந்தபட்சம் அது பற்றிய அறிவோடு அதை அறிந்து கடக்க வேண்டும்.

இந்த சிந்தனை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைச் செய்யும் ஒழுங்குபடுத்தல் ஏற்பாட்டாளர்களுக்கு வேண்டும்.

முள்ளிவாய்க்காலிற்கு ஏன் இந்த நிலை! தேடுவாரற்றுக் கிடக்கும் ஈழத் தமிழரின் பெரும் அடையாளம் | Mullivaikal Must Be Considered

அது இருப்பதாக தெரியவில்லை.

ஆலயங்களுக்கொரு பரிபாலனை சபை போல முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கான ஒரு பொது நிர்வாக சபையை உருவாக்குதல் ஏற்புடையதாகும். நினைவை அனுசரிப்பதோடு கடந்து போகாது வீழ்ந்த இடத்திலிருந்து எழுந்து கொள்ள ஆவன செய்து கொள்ளலாம் இந்த சபை மூலம்.

நினைவிடத்திற்கான வழிகாட்டல் பாதை இனம் காட்டிகளை நிறுவுதல் அவசியமானது. நினைவிடத்தில் பெயர்ப்பலகை ஒன்றையும் நிறுவ வேண்டும். அவை சீராகவும் ஒழுங்குமுறையாகவும் பராமரித்தலுக்கான ஏற்பாடுகளும் அவசியமாகும்.

வீழ்ந்த இடம்  

நானூறாண்டுகளாக வீழ்ந்து போயிருந்த தமிழினம் தனக்குள் இருந்த வீரத்தை இனம் கண்டு இந்த உலகுக்கு எடுத்தியம்பிய பெரும் படை சாய்ந்து கொண்ட நிலம் முள்ளிவாய்க்கால்.

மே - 18. எப்படி வீழ்ந்தோம். எப்படி வீழ்த்தப்பட்டோம். 'தோற்றோம்' என்பதை ஏற்றோம் என்றால் தோற்ற காரணம் தேடி ஆராய்வோம்.

தோற்றிட காரணங்கள் எவையென தேடி ஆராய்ந்து தவறுகளிலிருந்து எம்மை நாம் திருத்திக்கொள்ள முள்ளிவாய்க்கால் நினைவு எல்லோரிடமும் நித்தம் மீண்டு கொண்டிருக்க வேண்டும்.

முள்ளிவாய்க்காலிற்கு ஏன் இந்த நிலை! தேடுவாரற்றுக் கிடக்கும் ஈழத் தமிழரின் பெரும் அடையாளம் | Mullivaikal Must Be Considered

இதற்கான ஒரு வழியாக நினைவுத்திடலினை பேணிப்பராமரிப்பதை முன்னெடுக்கும்.

இளையவர்களிடையே தேடலை தூண்டி நாளைக்காக அவர்களது வாழ்வை ஒழுங்கமைத்துக் கொள்ளவும் உதவிடும் வகையில் பணியாற்றிட வேண்டும்.

சுற்று மதில் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தினை சூழ வலுவான சுற்று மதில் ஒன்றை அமைத்து அதன் எல்லைகளை எல்லைப்படுத்துவதோடு சுவரின் மீது நினைவு சுமந்த உணர்வு வரிகளை எழுதி வைத்து விட்டால் நினைவிடத்தை பார்த்துச் செல்ல வருவோருடன் அவை மனதால் பேசி உணர்வில் கலந்து விடும். உலக மக்களிடையேயும் சரி ஈழத்தமிழ் மக்களிடையேயும் தெளிவான பார்வையையும் தமிழர் தாம் ஈழத்தில் சுமக்கும் வலிகளையும் எடுத்தியம்பி நீதிக்கான பாதையை விரைவாக்கும்.

சிங்கள மக்களிடையேயும் மாற்றம் வரும். சிங்கள மக்களிடையேயும் தமிழர் உணர்வுகளை எடுத்தியம்பும். தமிழரின் உயர்ந்த நற்குணங்கள் புரிந்து கொள்ள வைக்கும். புரிந்துணர்வால் தமிழரும் உரிமையோடு வாழத்தான் வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்க விதையாகிப் போகும்.

அரசியலாளர்கள் சிங்கள மக்களை அரசியல் இலாபங்களுக்காக தூண்டி இனங்களுக்கிடையேயான முரண்பாடுகளினால் இலாபமடையும் போது சிங்கள மக்களை விழித்துக்கொள்ள இந்த முயற்சி வைத்து விடும்.

முள்ளிவாய்க்காலிற்கு ஏன் இந்த நிலை! தேடுவாரற்றுக் கிடக்கும் ஈழத் தமிழரின் பெரும் அடையாளம் | Mullivaikal Must Be Considered

இறந்தவர்கள் மீதான தமிழரின் அதீத மரியாதை பண்பை உலகறியச் செய்யும். ஆற்றலை வெளிக்காட்டும்.

முள்ளிவாய்க்கால் நினைவுத்திடலில் அமையும் சுற்று மதிலின் ஓரமாக மரங்களை நாட்டி வளர்த்தல், தமிழர் வீரம் பேசும் சிலைகளை ஆக்கி வைத்தல்,  இறுதி யுத்தத்தின் வலிகளை செதுக்கி வைத்தல் என்று அந்த நிலத்தில் ஒரு அறிவாலயத்தை நினைவாலயத்தோடு பேணிக்கொள்ளலாம்.

முள்ளிவாய்க்காலிற்கு ஏன் இந்த நிலை! தேடுவாரற்றுக் கிடக்கும் ஈழத் தமிழரின் பெரும் அடையாளம் | Mullivaikal Must Be Considered

புலம்பெயர் நாடுகளில் இருந்து சொந்தநாட்டிற்கு வந்து திரும்பும் ஒவ்வொரு தமிழனுக்கும், அடுத்த தலைமுறையினருக்கும் உணர்வுகளைக் கடத்து ஒரு இடமாக அது மாற்றப்படவேண்டும்.

நினைவு நாளில் கூடிப்பேசி கூட்டங்களை நடாத்தி விளக்கேற்றி விட்டு வருடத்தில் ஏனைய நாட்களில் மறந்து கடந்து போதல் நலமன்று.

ஆய்வும் ஆராய்சியும் - ஊகி. 



மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US