நினைவேந்தல் நிகழ்வுகளை எந்த இடத்திலும் நடத்த முடியும்: ரணில் தெரிவிப்பு
"கொழும்பு- பொரளையில் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை குழப்ப முயன்றதைக் கண்டிக்கின்றேன்" என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றையதினம்(23.05.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
நினைவேந்தல் நிகழ்வுகளை எந்த இடத்திலும் நடத்த முடியும். அதற்கு வடக்கு, கிழக்கு, தெற்கு என்று வேறுபாடு கிடையாது.
போரில் இறந்தவர்களின் உறவுகள் எங்கெங்கெல்லாம் இருக்கின்றார்களோ அங்கெங்கெல்லாம் நினைவேந்தலை அனுஷ்டிக்க முடியும்.
பயங்கரவாதிகளுக்கு தடை
கொழும்பில் அண்மையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வை ஒரு குழுவினர் இனவாத நோக்கத்தோடு தடுத்து நிறுத்த முற்பட்டதைக் கண்டிக்கின்றேன்.
இதேவேளை பயங்கரவாதிகளை எவரும் எந்த இடத்திலும் நினைவேந்த முடியாது.
ஆனால், போரில் இறந்த உறவுகளை அவர்களின் சொந்தங்கள் சுதந்திரமாக நினைவேந்த முடியும்.அதைத் தடுத்து நிறுத்த நாட்டில் எந்தச் சட்டத்திலும் இடமில்லை என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
