முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு கஞ்சி வழங்கி வைப்பு(Photos)
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்
யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
யாழ்.நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவிடம், தொண்டமனாறு, வடமராட்சி, நாவற்குழி என பல்வேறு பகுதிகளிலும் இன்றைய தினம் (12.05.2023) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில், முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவாக, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குமாறு யாழ். பல்கலைகழக மாணவர் ஒன்றியம் அனைத்து தரப்பிடமும் கோரிக்கை விடுத்துள்ளதுடன், மாணவர்களும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலும் கஞ்சி வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ். தொண்டமனாறு
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று(12.05.2023) தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழரசு கட்சியின் வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.சுகிர்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னதாக சந்நிதி ஆலயத்தில் ஆத்மா சாந்தி பூசை வழிபாடுகள் இடம் பெற்றுள்ளன.
இதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு வழங்கப்பட்டது.
மேலதிக செய்தி- எரிமலை
திருகோணமலை
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு திருகோணமலை சிவன்கோவிலடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த செயற்திட்டமானது இன்று (12.05.2023) காலை 8:30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள வீடுகளிற்கு சென்று மாணவர்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சிக்கான அரிசி மற்றும் விறகினை பெற்று திருகோணமலை சிவன்கோவிலடி முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சியினை வழங்கியுள்ளனர்.
மேலதிக செய்தி - கஜின்ந்தன்
மட்டக்களப்பு
வலிசுமந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்றைய தினம் (12.05.2023) பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் மதத்தலைவர்கள் மற்றும் மாணவர்கள் ,பொதுமக்கள் என பலர் இணைந்து கஞ்சியை பகிர்ந்துண்டு வலிசுமந்த நினைவுகளை மீட்டிருந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலதிக செய்தி-ராக்கேஷ்
வல்வெட்டித்துறை
வல்வெட்டித்துறை - கம்பர்மலை சந்தியிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு க இன்று (12.04.2023) இடம்பெற்றுள்ளது.
இதன்போது பாரதி சனசமூக நிலைய இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்ட இன் நிகழ்வில் முன்னதாக வன்னிச்சை அம்மன் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து கம்பர்லை சந்தியில் உள்ள நினைவாலயம் முன்பாக கஞ்சி காச்சி வழங்கப்பட்டதுடன் கொல்லப்பட்ட மக்களிற்கு சுடர் ஏற்றி அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.
மேலதிக செய்தி - எரிமலை
யாழ்.பல்கலைக்கழகம்
முள்ளிவாய்க்கால் கஞ்சி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அருகே மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்டு, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.
இதன்போது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
செய்தி- தீபன்
வவுனியா
வவுனியா மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால்
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு வவுனியா இலுப்பையடி பகுதியில்
இடம்பெற்றத
பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு கஞ்சி அருந்தி சென்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி- திலிபன்
முல்லைத்தீவு
முள்ளிவாய்க்கால் போரின் 14 ஆம் ஆண்டு நினைவு முன்னிட்டு வடக்கு கிழக்கு பகுதிகளில் காஞ்சி காச்சி வழங்குவதும் இன அழிப்பின் வாகன பேரணி முன்னெடுக்கும் நிகழ்வும் கட்சிகள் அமைப்புகள் தமிழ் இன உணர்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இன அழிப்பின் வெளிப்பாட்டைக் கொண்டு வரும் நோக்கில் தமிழின உணர்வாளர்களால் வாகன பேரணி ஒன்று முள்ளிவாய்க்கால் கப்பல் அடி கடற்கரையிலிருந்து தொடங்கி வைக்கப்பட்டது.
இன்று12.05.23 முன்னதாக முல்லைத்தீவு மாவட்டவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முள்ளிவாய்க்கால் பொதுச் சந்தை முன்பாக ஒன்று கூடி முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்கி தொடர்ந்து வாகனச்சுடர் பேரணியை தொடக்கி வைத்தார்கள்.
மேலும், கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்" என்ற
தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் (12.05.2023) தொடக்கம் (18.05.2023) வரை முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் வேலைத்திட்டம் முல்லைத்தீவு
மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
புலனாய்வாளர்களின் கெடுபிடிகளுக்கு மத்தியில் கஞ்சி வழங்கு செயற்பாட்டை காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொது அமைப்பினர் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.
செய்தி-வன்னியன்
மட்டக்களப்பு
முள்ளிவாய்க்கால் தினத்தை முன்னிட்டு தமிழர் தாயக மக்கள் அமைப்பினால் காந்தி பூங்கா முன்பாக கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியனேந்திரன், ஞா.ஸ்ரீநேசன், சர்வ மத தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரும் கலந்து கொண்டிருந்தனர்.
செய்தி-குமார்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |















சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan
