முல்லைத்தீவில் மாயமான கல்லில் பொறிக்கப்பட்டிருந்த வாசகம்
முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள நினைவு முற்றத்தில் இருந்த நினைவுத்தூபி இன்று அதிகாலை சேதமாக்கப்பட்டிருந்தது.
அத்துடன், நடுகை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல்லும் இரவோடு இரவாக காணாமல் ஆக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் காணாமலாக்கப்பட்ட குறித்த கல்லில் பொறிக்கப்பட்ட வாசகம் அடங்கிய புகைப்படமொன்று வெளியாகியுள்ளது.
குறித்த கல்லில், தமிழினப்படுகொலை ஒரு தசாப்தத்தின் கோரிக்கைகள் என தெரிவித்து நான்கு கோரிக்கைகள் எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்த கோரிக்கைகளாவன,
1. முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டி இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த;
2. தமிழர்கள் ஒரு தேச அங்கீகாரத்திற்குரியவர்கள் என்பதையும், தமிழர்களின் தனித்துவமான இறையாண்மையினதும், ஒருபோதும் பாரதீனப்படுத்தப்பட முடியாத சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும், தமிழர்களின் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும் என்பதையும் கோர;
3. தமிழர் இன அடையாள இருப்பின் மீது கட்டவிழ்க்கப்பட்டுள்ள இனப்படுகொலையைத் தடுக்க;
4. தமிழர் சமூக அமைப்புக்களைப் பலப்படுத்தி தமிழின விடுதலைக்காக உழைக்க.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 17 மணி நேரம் முன்

மணிமேகலையை தாக்கி தான் ரக்ஷன் இப்படி பேசினாரா.. குக் வித் கோமாளி 6ல் என்ன கூறினார் பாருங்க Cineulagam

போட்டோஸ் ஓவர், திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட தொகுப்பாளினி பிரியங்கா.. இதோ Cineulagam
