முள்ளியவளையில் தவறான முடிவு எடுத்த யுவதி மரணம்
முல்லைத்தீவு - முள்ளியவளை பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
முள்ளியவளை 4ஆம் வட்டாரத்தினை சேர்ந்த முள்ளியவளை வித்தியானந்த கல்லூரியில் கல்விகற்று சாதாரண தர பரீட்சை எழுதிய 16 அகவையுடைய வர்சிகா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 19.10.21 அன்று வீட்டில் தவறான முடிவெடுத்த நிலையில் உறவினர்களால் காப்பாற்றப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், அங்கு சிகிச்சையளிக்க முடியாத நிலையில் யுவதி மீண்டும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

அடுத்து பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவை தொடங்கிய ஜீ தமிழ்.. அர்ச்சனா தொகுப்பாளினி, நடுவர்கள் யார் யார்? Cineulagam

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
