முல்லைத்தீவில் வீட்டைவிட்டு போன சிறுவன் வவுனியாவில் கடை ஒன்றில் மீட்பு
முல்லைத்தீவு மாவட்டம் உண்ணாப்பிலவு பகுதியில் மாலைநேர வகுப்பிற்காக சென்றிருந்த நிலையில் காணாமல்போயிருந்த சிறுவன் வவுனியாவில் கடை ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் க.பொ. சாதாரணதரத்தில் கல்விகற்று வரும் உண்ணாப்பிலவு முல்லைத்தீவினை சேர்ந்த கே.சானுயன் என்ற சிறுவன் கடந்த 17ஆம் திகதி மாலைநேர வகுப்பிற்காக மாலை 6 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவர் வீடு திரும்பாதநிலையில், தனது மகனை காணவில்லையெனவும், தனது மகனை கண்டுபிடித்து தருமாறும் பெற்றோரால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் சிறுவனை காணவில்லை என வெளியான தகவலை தொடர்ந்து வவுனியாவில் கடை ஒன்றில் வேலைசெய்து கொண்டிருந்த சிறுவன் தொடர்பில் அவனது உறவினர்களுக்கு தொலைபேசியில் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து இன்று சிறுவனை அழைத்துவந்த உறவினர்கள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில்
முன்னிலைப்படுத்தி முறைப்பாட்டினை நீக்கம் செய்துள்ளனர்.
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
நான் செத்துப்போகலாம்.. கண்கலங்கி அழும் அண்ணாமலை! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri