முல்லைத்தீவில் யானைத்தாக்குதலுக்கு இலக்கான ஆசிரியர்
காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகிய ஆசிரியர் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் (19) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு, முள்ளியவவளை பகுதியில் இருந்து கேப்பாபிலவு வீதியால் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது புதுக்குடியிருப்பு கள்ளியடி பாலத்தடியில் இரண்டு யானை வீதியை வழிமறித்து ஆசிரியரின் மோட்டார் சைக்கிளை தூக்கி எறிந்ததோடு குறித்த ஆசிரியரினை தாக்கிவிட்டு சென்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
அதனையடுத்து தாக்குதலுக்கு இலக்கான ஆசிரியர் காயங்களோடு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதலுக்கு இலக்கான ஆசிரியர் நடனசபாபதி சிவசோதி கணுக்கேணி முள்ளியவளையை சேர்ந்த 28 வயதுடைய உடையார்கட்டு குரவில் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் என்பதும் குறிப்பிடதக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam
