முல்லைத்தீவு மாவட்டத்தில் மணல் மற்றும் கிரவல் அகழ்வு தொடர்பான விசேட கூட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் மணல் மற்றும் கிரவல் அகழ்வு தொடர்பான விசேட கூட்டம் இன்று (17) மாவட்டச் செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டுறவு பிரதி அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான உபாலி சமரசிங்க அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில் சட்டவிரோத மணல் மற்றும் கிரவல் அகள்வினை கட்டுப்படுத்தல், அனுமதிகள் வழங்குதல், கனியவள பாதுகாப்பு, பொலிசாரின் பரிசோதனை என பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
குறித்த கலந்துரையாடலில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன், மாவட்டச் செயலக மேலதிக அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், துறைசார்ந்த அதிகாரிகள், தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட, பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மண் மற்றும் கிரவல் வியாபாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.


தமிழின அழிப்பில் முன்னேறிச் செல்லும் பௌத்த சிங்கள அரசியல் 17 மணி நேரம் முன்
இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் துணையாக இருப்பேன்..ஆனால் மோடி இருந்தால்தான் - ட்ரம்ப் News Lankasri