முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்து
முல்லைத்தீவு (Mullaitivu) - உடையார்கட்டு பகுதியில் பட்டா ரக வாகனத்துடன் பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்துச் சம்பவமானது நேற்று (03.05.2024) நண்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பேருந்து சேதமடைந்துள்ளதுடன் உயிரிழப்புக்கள் எவையும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதியின் கவனயீனம்
புதுக்குடியிருப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றிற்கு செல்லும் நோக்கில் பாரதி மகா வித்தியாலயத்தின் மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே இதன்போது விபத்துக்குள்ளாகியுள்ளது.
புதுக்குடியிருப்பு நோக்கிப் பயணித்த பட்டா வாகானத்தின் மீது பின்னால் வந்த பேருந்து மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன் விபத்து நிகழ்ந்தமைக்கு பேருந்து சாரதியின் கவனயீனமே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
