முல்லைத்தீவு கடற்பகுதிகளில் குறைந்து வரும் சட்டவிரோத நடவடிக்கைகள்
முல்லைத்தீவு - வெத்திலைக்கேணி கடற்படை முகாமினால் வெளி இணைப்பு இயந்திரங்கள் கொண்டு சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று (17.04.2024) கடற்றொழில் அமைச்சருக்கும் முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துரையாடுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், " கடந்த 28.05.2023 தொடக்கம் 17.04.2024 வரையில் வெத்திலைக்கேணி 225 வெளி இணைப்பு இயந்திரங்கள் மற்றும் 34 சுருக்குவலை தொழில் படகுகளும் கைதுசெய்யப்பட்டுள்ளன.
கடற்றொழில் நீரியல்வள திணைக்களம்
அம்பன் தொடக்கம் சாலைவரையிலான 54 கிலோமீற்றர் தூர கடற்பரப்பில் இடம்பெற்று வரும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகள் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
நாகர்கோவில், சுண்டிக்குளம், சாலை போன்ற பகுதிகள் தான் வெத்திலைக்கேணி கடற்படையினரின் பகுதிகளாக காணப்படுகின்றன. இந்த பகுதியில் குழைகட்டி கணவாய் பிடித்தவர்களின் 10 படகுகள் கைது செய்யப்பட்டுள்ளன.
கடற்படையின் உயர் அதிகாரிகள் மற்றும் யாழ். கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் தாம் இவ்வாறான சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி வருகின்றோம்" என குறிப்பிட்டுள்ளார்.
இது இவ்வாறிருக்கையில், சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத்துவது தொடர்பில் இந்த ஆண்டு இதுவரை ஒரு படகு கூட முல்லைத்தீவில் கைது செய்யப்படவில்லை என கடற்றொழில் அமைச்சரிடம் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |