இராணுவத்தினரால் கொல்லப்பட்ட தமிழ் இளைஞனின் உடற்கூற்று பரிசோதனை மாதிரிகள் கொழும்புக்கு
முல்லைத்தீவு - முத்துஐயன்கட்டு குளத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டதுடன் மாதிரிகள் மேலதிக பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளன.
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முத்துஐயன்கட்டுப் பகுதியில் கடந்த 07.08.2025 அன்று இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போனதாக தேடப்பட்டுவந்த 32 வயதான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்ற குடும்பஸ்தரே நேற்று முத்துஐயன்கட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
உடற்கூற்று பரிசோதனை
நீதவானின் முன்னிலையில் சடலம் குளத்திலிருந்து மீட்கப்பட்டதுடன், தடயவியல் பொலிசாரால் தடயவியல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில், இன்றையதினம் யாழ். போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியினால் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் மரணத்திற்கான தெளிவான காரணம் குறிப்பிடப்படாமல் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதுடன் மேலதிக பகுப்பாய்வுக்காக மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரால் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன் : முகம் முழுவதும் காயங்கள்! உறவினர்களின் பகிரங்க வாக்குமூலம்





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 14 மணி நேரம் முன்

விக்ரம் ரோலக்ஸ் போல் கூலி படத்தில் சர்ப்ரைஸ் ஹீரோ கேமியோ.. மிரட்ட வரும் முன்னணி நடிகர்? யார் தெரியுமா Cineulagam

ட்ரம்பின் வரி விதிப்பால் பெரும் கவலையில் முகேஷ் அம்பானி... தொழில் ஒன்று பாதிக்கப்படும் அபாயம் News Lankasri
