முல்லைத்தீவு - செம்மலை வீதியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது
முல்லைத்தீவு - செம்மலை வீதியில் வைத்து ஒரு கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.
இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை பகுதியினை சேர்ந்த 35 அகவையுடைய நபர் முல்லைத்தீவு மாத்தளன் சாலைப் பகுதியில் கடற்தொழில் செய்பவர் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஒரு கிலோ கிராம் எடைகொண்ட கஞ்சா பொதியினை முல்லைத்தீவு மாஞ்சோலை பகுதியிலிருந்து திருகோணமலைக்கு உந்துருளியில் கொண்டு சென்ற வேளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய செம்மலைப்பகுதியில் சந்தேகத்தில் மறித்துச் சோதனைசெய்த போது கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் கஞ்சா பொதியும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையினை முல்லைத்தீவு
பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam