ஐந்தாவது நாளாக தொடரும் முல்லைத்தீவு சட்டத்தரணிகளின் பணிப்பகிஷ்கரிப்பு
முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று(06.10.2023) ஐந்தாவது நாளாக தொடர்கிறது.
கடந்த (02.10.2023) ஆம் திகதி ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று (06.10.2023) ஐந்தாவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
நீதி துறைக்கான சுதந்திரமும், சுயாதீன தன்மைகளும் உறுதி செய்யப்படும் வரை பணிபுறக்கணிப்பில் ஈடுபடுவோம் என முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் மேற்கொண்டதாக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் த. பரஞ்சோதி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
முல்லைத்தீவு நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருக்கின்ற அதேவேளையில் மாங்குளம் நீதிமன்றத்தினுடைய நடவடிக்கைகளுக்கும் சட்டத்தரணிகள் செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri
