குருந்தூர்மலை பெரும்பான்மையினருக்கே! இனவாதத்தை கக்கும் சரத் வீரசேகர
இலங்கை பௌத்த – சிங்கள நாடு. இங்கு எங்கும் புத்தர் சிலைகளை வைத்து வழிபடுவதற்கு உரிமையுண்டு. அதை எவரும் தடுக்க முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
குருந்தூர்மலையில் நீதிமன்ற உத்தரவை மீறி புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், "குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விகாராதிபதியிடமும், மறவன்புலவு சச்சிதானந்தத்திடமுமே கேட்க வேண்டும்.
இலங்கை சிங்கள – பௌத்த நாடு
ஆனால், இலங்கை சிங்கள – பௌத்த நாடு. புத்தர் சிலைகளை எங்கும் வைத்து வழிபடுவதற்கு உரிமையுண்டு. அதை யாராலும் தடுக்க முடியாது" என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |