கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு நிதி வழங்கும் அரசாங்கம்
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு ஜனாதிபதி பிரிவில் இருந்து நிதி கிடைக்கவுள்ளதாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்துள்ளார்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.பார்த்தீபன் தலைமையில் இன்றைய தினம் (08.08.2023) நடைபெற்றுள்ளது.
இதன்போது, இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணையினை எதிர்வரும் 10.08.23 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன், சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் நேரில் சென்ற களஆய்வினை மேற்கொண்டு அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பிரிவில் இருந்து நிதி
இந்த வழக்கு விசாரணையில் கலந்து கொண்ட சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு ஜனாதிபதி பிரிவில் இருந்து நிதி கிடைக்க இருப்பதாகக் காணாமல் போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், தொல்பொருள் திணைக்களம் மற்றும் ஏனைய திணைக்களத்தின் பிரதிநிதிகள் சேர்ந்து 10 ஆம் திகதி சந்தேகத்திற்கு இடமான பிரதேசத்தினை அளவிட்டு அதற்கான கணிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் அகழ்வுப்பணிக்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதில் தொல்பொருள் திணைக்களம் முன்னிலையாகாத நிலையில் நாளை மறுதினம் (10.08.2023) பார்வையிட்டு மூன்று வார காலம் கேட்டு இது தொடர்பிலான பாதீட்டினை நீதிமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக நீதிமன்றுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
