தோண்ட தோண்ட மனித எச்சங்கள்! வெளிவரும் பல ஆதாரங்கள்: செய்திகளின் தொகுப்பு
முல்லைத்தீவு- கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பில் எதிர்வரும் 13 ஆம் திகதி முல்லைத்தீவு நீதிமன்றத்தில் விசேட கலந்துரையாடல் மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அகழ்வுப்பணியுடன் தொடர்புடைய திணைக்களங்கள் மற்றும் அமைப்புக்களுடன் இந்த விசேட கலந்துரையாடல் மேற்கொள்ளப்படும்.
மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட பகுதியில் நேற்று(06.07.2023) முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப்பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய நேற்று காலை 10.00 மணியளவில் தொடங்கிய அகழ்வுப்பணி, மாலை 03.30 மணி வரையில் இடம்பெற்றது.
இவ்வாறு இடம்பெற்ற அகழ்வுப்பணியின் பிரகாரம் 13 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதுடன், அவை தடயவியல் பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா, தடயவியல் பொலிஸார் உள்ளிட்டவர்களால் இந்த அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்திகளுடன் இன்னும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,