மக்களை யார் பாதுகாப்பது! சாணக்கியன் ஆதங்கம்
கொலை மிரட்டல் காரணமாக ஒரு நீதிபதி பதவி விலகி நாட்டை விட்டுத் தப்பிச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில் நாட்டு மக்களின் நிலை என்ன என்பதை கற்பனை செய்து பார்க்க வேண்டும் என்று இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,"சனல் 4 இல் வெளியான தகவல்கள் குறித்து விசாரணை கோரி பதிவிட்ட பல இளைஞர்களுக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணைக்கு அழைத்துள்ளது.
விசாரணைக்கு அழைப்பு
ஆனால் சனல் 4 குற்றம் சாட்டியுள்ள ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு எதிராக விசாரணை இடம்பெறவில்லை.
இந்நிலையில் கொலை மிரட்டல் காரணமாக ஒரு நீதிபதி பதவி விலகி நாட்டை விட்டுத் தப்பிச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதற்கமைய நாட்டு மக்களின் நிலை என்ன என்பதை கற்பனை செய்து பார்க்க வேண்டும்."என கூறியுள்ளார்.

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
