முல்லைத்தீவு - ஐயன்கன் குளம் விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம்
முல்லைத்தீவு(Mullaitivu) ஐயன்கன் குளம் பிரதேத்தைச் சேர்ந்த விவசாயிகள் தமக்கான மேலதிக தண்டத்தை அறவீடு செய்வதை நிறுத்துமாறும் உரிய பிரதேசகமக்கார அமைப்பை புனரமைக்குமாறும் கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்று(01.04.2024) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு வவுனிக்குளம் நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழுள்ள ஐயன்கன் குளத்தின் கீழ் கடந்த 2023 சிறுபோக செய்கையின் போது விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக செய்கைக்கான தண்ட அறவீட்டை நிறுத்துமாறும் அல்லது கால அவகாசம் வழங்குமாறு கோரியுமே போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை அடங்கிய மனு
தொடர்ந்து விவசாயிகள் தமது கோரிக்கை அடங்கிய மனுவை துணுக்காய் கம நல சேவை நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.வசந்தனிடம் மக்கள் கையளித்துள்ளனர்.

இதனையடுத்து துணுக்காய் பிரதேச செயலகத்திற்கு சென்று தமது கோரிக்கை அடங்கிய மனுவை துணுக்காய் பிரதேச செயலாளர் இ.ரமேஷிடம் கையளித்திருதார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam