முல்லைத்தீவு அடிப்படை வசதிகளற்று இயங்கும் பாடலை: நேரில் சென்று பார்வையிட்ட ரவிகரன் எம்.பி

Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Government
By Shan Jan 31, 2026 08:17 AM GMT
Report

முல்லைத்தீவு - தண்ணீரூற்று இலங்கைத் திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை அடிப்படை வசதிகளற்ற நிலையில் மிகவும் மோசமான குறைபாடுகளுடன் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று(30.01.2026) வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறித்த பாடசாலை நேரில் சென்று குறைபாடுகளை பார்வையிட்டுள்ளார். 

அவுஸ்திரேலியாவில் ஏலத்திற்கு வரும் கிராமம்!

அவுஸ்திரேலியாவில் ஏலத்திற்கு வரும் கிராமம்!

முறைப்பாடுகள்

இதன்போது, பாடசாலையின் நலன்விரும்பிகளின் முறைப்பாட்டிற்கு அமைவாக இவ்வாறு குறித்த பாடசாலைக்கு கள விஜயம் மேற்கொண்டதாகவும், பாடசாலையின் சுற்றுப்புறச்சூழலையும், வகுப்பறைக்கட்டடங்களையும் பார்வையிட்டதுடன், பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள், நலன்விரும்பிகளுடன் கலந்துரையாடி குறைபாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், தரம் 01 தொடக்கம் தரம் 05 வரையான வகுப்புக்களைக் கொண்ட குறித்த பாடசாலையில் 79மாணவர்கள் கவ்வி கற்று வருகின்றார்கள்.

முல்லைத்தீவு அடிப்படை வசதிகளற்று இயங்கும் பாடலை: நேரில் சென்று பார்வையிட்ட ரவிகரன் எம்.பி | Mullaitivu Is A Country Without Basic Amenities

இருப்பினும், குறித்த பாடசாலையின் சுற்றுப்புறச்சூழலும், வகுப்பறைக்கட்டடங்களும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுக் காணப்படுவதாக பாடசாலையின் நலன் விரும்பிக்கள் மற்றும் பெற்றோரால் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அத்துடன், இப்பாடசாலையில் மிகவும் பழமையான வகுப்பறைக்கட்டடங்கள் வெடிப்புக்களுடனும், கரைகள் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அதே சமயம், பாடசாலையின் சுற்றுப்பறச்சூழல் நீர் தேங்கிய நிலையில், சேறும் சகதியுமாகக் காணப்படுவதால் பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும் வகுப்பறைக்குச் செல்வதற்கு பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். வகுப்பறைகளுக்குச் செல்வதற்கு பிரத்தியேகமாக சீமெந்தினால் அமைக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான வழித்தடத்தினையே மாணவர்களும் ஆசிரியர்களும் பயன்படுத்துகின்றனர்.

முல்லைத்தீவு அடிப்படை வசதிகளற்று இயங்கும் பாடலை: நேரில் சென்று பார்வையிட்ட ரவிகரன் எம்.பி | Mullaitivu Is A Country Without Basic Amenities

எனவே, இத்தகைய சிறிய அளவிலான வழித்தடத்தினைப் படுன்படுத்துவதால் மாணவர்கள் வழித்தடத்திலிருந்து விலகி சேற்றுப் பகுதிக்குள் தவறி வீழ்கின்ற அபாயநிலை காணப்படுவதாக பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, மாணவர்கள் பயன்படுத்துகின்ற கழிப்பறைளைச்சூழ சேறும் சகதியுமாகக் காணப்படுவதாலும், கழிப்பறைகளுக்கு செல்வதற்கு பாதுகாப்பான வழித்தட வசதிகள் எவையுமின்மையாலும் ஆசிரியர்களுக்கென அமைக்கப்பட்ட கழிப்பறைகளையே மாணவர்கள் தற்போது பயன்படுத்தி வருகின்ற நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை விளையாட்டு மைதானம் உட்பட சுற்றுப்புறச் சூழலெங்கும் சேறும் சகதியுமாக காணப்படுவதால் நுளம்புகள் பெருகி மாணவர்களுக்கு நோய்த்தொற்றுக்கள் ஏற்படும் அபாயங்கள் காணப்படுவதுடன், மாணவர்கள் இணைபாடவிதானச் செயற்பாடுகளில் ஈடுபடமுடியாத நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுதவிர, குறித்த பாடசாலையில் காணப்படுகின்ற வகுப்பறைக் கட்டடங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான கட்டடங்களும் பழைய கட்டடங்களாகக் காணப்படுவதாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டது. 

ஆபத்தான நிலை

இந்நிலையில் வகுப்பறைக் கட்டடங்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் காணப்படுவதையும், அந்தவெடிப்புக்களின் ஊடாக நீர் ஊற்றெடுத்து வகுப்பறைகளுக்குள் காணப்படுவதையும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் பார்யிட்டார்.

முல்லைத்தீவு அடிப்படை வசதிகளற்று இயங்கும் பாடலை: நேரில் சென்று பார்வையிட்ட ரவிகரன் எம்.பி | Mullaitivu Is A Country Without Basic Amenities

பாடசாலையின் சுற்றுப்புறச்சூழல் மற்றும் வகுப்பறைக் கட்டடம் என்பன இவ்வாறு வெகுவாகப் பாதிக்கப்பட்டுக் காணப்படுவதனால் இப்பாடசாலையில் மாணவர்களை இணைப்பதற்கு பெற்றோர்கள் அஞ்சுவதாகவும், இதனால் இந்த படசாலையின் மாணவர் எண்ணிக்கையும் குறைவடைந்து செல்வதாகவும் பாடசாலை நலன்விரும்பிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த பாடசாலையின் குறைபாடுகளைச் சீர்செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அங்கிருந்தவர்களுக்கு பதில் கொடுத்துள்ளார். 

வவுணதீவில் 15 பேர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு! நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்து

வவுணதீவில் 15 பேர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு! நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்து

அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி

அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி

GalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US