குளத்தினை புனரமைக்க இராணுவத்தின் உதவியினை நாடிய விவசாயிகள்! (Video)
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மருதமடு குளத்தின் அணைக்கட்டு நீர் அரிப்பெடுத்து பாரியளவில் சேதமடைந்துள்ளது.
இனிவரப்போகும் காலம் மழைகாலத்தினை கருத்தில் கொண்டு குளக்கட்டினை பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
68ஆவது படைப்பிரிவின் 2ஆவது படையணி
விவசாயிகள் குளக்கட்டினை புனரமைக்க மேற்கொண்ட முயற்சிக்கு மக்களின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்காத காரணத்தினால் புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள 68ஆவது படைப்பிரிவின் 2ஆவது படையணி அதிகாரியிடம் விவசாயிகள் கமக்கார அமைப்பினர் உதவியினை கோரியுள்ளார்கள்.
இதற்கமைய நூற்றுக்கணக்கான படையினர் வருகை தந்து குளக்கட்டினை புனரமைக்கும் பணியினை (18.10.22) இன்று முன்னெடுத்துள்ளார்கள்.
குளத்தின் அணைக்கட்டு
குளத்தின் அணைக்கட்டு பாரியளவில் அரிப்பெடுத்துள்ளதால் அதனை சீர்செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது இராணுவத்தினர் மற்றும் கமக்கார அமைப்பினர், நன்னீர் மின்பிடி சங்கத்தினர் இணைந்து புனரமைத்துள்ளார்கள்.
1500 வரையான மண் மூடைகள் இதன்போது அணைக்கட்டுக்கு போடப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளது.
புனரமைப்பு
நடவடிக்கைக்கு முழுமையான கனர இயந்திரங்கள் மற்றும் மனித வலுக்களை பயன்படுத்தி
இராணுவத்தினருக்கு கமக்கார அமைப்பினர் நன்றியினை தெரிவித்துள்ளார்கள்.






